'கலைஞர் வீட்டிற்கு வந்தவுடன் நேரில் வந்து பாருங்க'.. சிறுமியை நெகிழவைத்த ஸ்டாலின்!

Home > News Shots > தமிழ்

By |
MK Stalin meets 8 year girl who wrote the letter to Karunanidhi

திமுக  தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான  கலைஞர் மு.கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் பெறவேண்டி பல்வேறு தரப்பினரும் மனமுருகி பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேபோல சென்னை பட்டாபிராமை சேர்ந்த மிச்செல் மிராக்ளின்,  என்ற 8 வயது சிறுமி கலைஞர் அவர்கள் உடல்நலம் பெற வேண்டும் என கடிதம் எழுதியிருந்தார்.

 

இந்தக் கடிதம், தி.மு.க ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. சிறுமியின் இந்த நெகிழ்ச்சியான கடிதம், செய்தித்தாள்களிலும் இடம்பிடித்தது. இந்நிலையில், சிறுமி மிச்செல் மிராக்ளின் மற்றும் அவரது தாயாரை ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார். 

 

நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் அச்சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமி மற்றும் அவரது தாயாரோடு உரையாடினார்.. மேலும் கலைஞர் அவர்கள் வீடு திரும்பியுடன் வீட்டிற்கு வந்து  அவரை சந்திக்குமாறு சிறுமியிடம் தெரிவித்தார்.