'காவல்துறையின்' கட்டுப்பாட்டுக்குள் வந்தது காவேரி மருத்துவமனை!

Home > News Shots > தமிழ்

By |
Security has been strengthened in front of Kauvery hospital

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அடுத்த 24 மணி நேரம் கழித்தே அவரது உடல்நிலை குறித்து கணிக்க முடியும் என்றும் காவேரி மருத்துவமனை இன்று மாலை அறிக்கை வெளியிட்டது.

 

இதனைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன்னர் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் சென்னை ஆணையர் விஸ்வநாதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துணை ஆணையர்களுடன் மயிலாப்பூரில், ஆலோசனை நடத்தினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

 

இந்தநிலையில் காவேரி மருத்துவமனை முன்னர் ஏராளமான போலீசார் தற்போது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.