'பாதுகாப்பு' ஏற்பாடுகள் குறித்து சென்னை 'கமிஷனர்' தீவிர ஆலோசனை!

Home > News Shots > தமிழ்

By |
KarunanidhiHealth: Chennai commissioner Vishwanathan discussed

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அடுத்த 24 மணி நேரம் கழித்தே அவரது உடல்நிலை குறித்து கணிக்க முடியும் என்றும் காவேரி மருத்துவமனை இன்று மாலை அறிக்கை வெளியிட்டது.

 

இதனைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன்னர் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் சென்னை ஆணையர் விஸ்வநாதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துணை ஆணையர்களுடன் மயிலாப்பூரில், தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் துணை மற்றும் போக்குவரத்து ஆணையர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

அனைத்து ஊழியர்களும் விழிப்புடன் இருக்கவும், விடுப்பில் உள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்பவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.