காவேரி மருத்துவமனைக்கு 'கனிமொழி எம்.பி' மீண்டும் வருகை

Home > News Shots > தமிழ்

By |
KarunanidhiHealth: Kanimozhi MP come back to Kauveri Hospital

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அடுத்த 24 மணி நேரம் கழித்தே அவரது உடல்நிலை குறித்து கணிக்க முடியும் என்றும் காவேரி மருத்துவமனை இன்று மாலை அறிக்கை வெளியிட்டது.

 

இதனைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன்னர் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

 

இதைத்தொடர்ந்து சென்னை ஆணையர் விஸ்வநாதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துணை ஆணையர்களுடன் மயிலாப்பூரில், தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் துணை மற்றும் போக்குவரத்து ஆணையர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

இந்தநிலையில் சற்றுமுன் காவேரி மருத்துவமனைக்கு கனிமொழி எம்.பி மற்றும் பொன்முடி ஆகியோர் வந்தனர். இதனால் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.