அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் டிஜிபி அவசர சுற்றறிக்கை !

Home > News Shots > தமிழ்

By |
DGP Circular to all district SPs Kauvery hospital police security

அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் டிஜிபி அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

 

அதில் அனைத்து மாவட்டத்தில் உள்ள காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள, காவல்துறை ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அந்தந்த மாவட்ட காவல்துறையின் தலைமையகத்தில் சீருடையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் அந்தந்த மண்டல காவல்துறை தலைவர்கள் தேவைக்கேற்ப கூடுதல் காவல்துறையினரை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதை தொடர்ந்து காவேரி மருத்துவமனை பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

 

இன்று மதியம் முதல் 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர்