'கருணாநிதிக்கு' மெரினாவில் இடம் ஒதுக்க.. தமிழக அரசு மறுப்பு!

Home > News Shots > தமிழ்

By |
KarunanidhiHealth: Stalin request CM for space in Anna memorial

கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என்றும்  காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை வெளியிட்டது.


தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு  இறந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. அதில் எவ்வளவு சிகிச்சை அளித்தும் கருணாநிதியை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளது.

 

முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, ஸ்டாலின் நேரில் சந்தித்து மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் கலைஞருக்கு இடம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இந்த நிலையில் சட்ட சிக்கல்கள் இருப்பதால் அண்ணா சமாதியில் இடம் ஒதுக்க முடியாது என்றும், அதற்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.