'உறங்கச்சென்றது உதயசூரியன்'..திமுக தலைவர் கருணாநிதி காலமானார்!

Home > News Shots > தமிழ்

By |
DMK Leader MKarunanidhi Passes away

கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என்றும்  காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை வெளியிட்டது.


தொடர்ந்து கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என காவேரி மருத்துவமனை இன்றுமாலை அறிக்கை வெளியிட்டது.

 

இந்தநிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு  இறந்ததாக காவேரி மருத்துவமனை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. அதில் எவ்வளவு சிகிச்சை அளித்தும் கருணாநிதியை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளது.