'டாஸ்மாக்' கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவு!

Home > News Shots > தமிழ்

By |
Tasmac outlets have been closed before 6 PM in Tamil Nadu

கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என்றும்  காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை வெளியிட்டது.இதைத்தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

 

இந்தநிலையில் கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என காவேரி மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை வெளியிட்டது.இதனால் காவேரி மருத்துவமனை முன் குவிந்துள்ள தொண்டர்கள் கதறி அழத் தொடங்கியுள்ளனர்.

 

இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன், டாஸ்மாக் கடைகளை மூடிடுமாறு தமிழம் முழுவதும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.