’எழுந்து வா உயிரே’..காவேரியில் கதறி அழும் திமுக தொண்டர்கள்!

Home > News Shots > தமிழ்

By |
DMK cadres plead at Kauvery Hospital

காவேரி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை மீது கவலைகொண்டு, ஏராளமான தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்தனர்.

 

கருணாநிதி மீண்டும் வருவார் என நம்பிக்கையுடன் இருந்த பலரும், அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்தாக வந்த காவேரி மருத்துவமனையின் மருத்துவ அறிக்கையை அறிந்ததும் மனம் விட்டு கதறி அழத் தொடங்கினர். 

 

சில திருநங்கைகளும், மூன்றாம் பாலினமான தங்களுக்கு முதன் முதலில் திருநங்கைகள் என்று பெயர் வைத்து அங்கீகரித்தவர் கலைஞர் என்று கூறி கதறி அழுதனர். 

 

மேலும் வெளியூர்களில் இருந்து குடும்பம் குடும்பமாக திமுக தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் நின்று ‘எழுந்து வா தலைவா.. எழுந்து வா உயிரே’ என்று அழுதபடி கோஷமிட்டனர். ’தமிழுக்காக வாழ்ந்த கலைஞர் மீண்டு வந்தால் மட்டுமே தமிழகத்தையும் தமிழினத்தையும் மீட்க முடியும்’, ‘அவருக்காக எங்கள் உயிரையே கொடுப்போம்’ என்றும் கூறினர்.