கலைஞர் கருணாநிதியின் 'இறுதி அஞ்சலி' விவரங்கள்

Home > News Shots > தமிழ்

By |
DMK Leader Karunanidhi Final Homage details here

கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என்றும்  காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை வெளியிட்டது.

தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி இறந்ததாக காவேரி மருத்துவமனை இன்று மாலை 6.10 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது.

 

இந்தநிலையில் கலைஞர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன:-

 

நள்ளிரவு 1 மணி வரை கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்.பின்னர் சி.ஐ.டி காலனி இல்லத்தில் கலைஞர் உடல் அதிகாலை 3 மணி வரை வைக்கப்படும்.

 

கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி காலனியில் கலைஞர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டும் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

பின்னர் அதிகாலை 4 மணி முதல் சென்னை ராஜாஜி ஹாலில் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.