'என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள்'.. ரஜினி இரங்கல்!

Home > News Shots > தமிழ்

By |
rajinikanth\'s deep condolences to Kalaingar Karunanithi

காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பலனின்றி திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி இன்று (ஆகஸ்ட் 07,2018) மாலை 6.10 மணி அளவில் உயிரிழந்தார்.

 

திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருக்கும் இத்தருணத்தில் கருணாநிதியின் இறப்பு குறித்த வருத்தத்துடனான ட்வீட்டை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

அந்த ட்வீட்டில், ‘என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

 

தான் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னர் ரஜினிகாந்த், கலைஞரின் இல்லத்தில் சென்று அவரை சந்தித்துவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.