கோபாலபுரத்தில் 'அஞ்சலிக்காக' வைக்கப்பட்டது கருணாநிதி உடல்

Home > News Shots > தமிழ்

By |
Karunanidhi body reached Gopalapuram residence

கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என்றும்  காவேரி மருத்துவமனை நேற்று மாலை  அறிக்கை வெளியிட்டது.

 

தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி இறந்ததாக காவேரி மருத்துவமனை இன்று மாலை 6.10 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு முன் குவிந்திருந்த தொண்டர்கள்,பொதுமக்கள் கண்ணீர் விட்டு கதறியழுதனர்.

 

இந்த நிலையில் அவரது உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. கோபாலபுரத்தில்  பொதுமக்கள் அஞ்சலிக்காக நள்ளிரவு 1 மணிவரை வைக்கப்படும். அதன்பின்னர் சிஐடி இல்லத்தில் 3 மணி வரையிலும், அதன்பின்னர் ராஜாஜி ஹாலில்  பொதுமக்கள் அஞ்சலிக்காக  அதிகாலை 4 மணிக்கு வைக்கப்படவுள்ளது .