'ஒரே ஒருமுறை' அப்பா என அழைத்து கொள்ளட்டுமா தலைவரே?.. ஸ்டாலின் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By |
MK Stalin Heartfelt message on Karunanidhi\'s Death

திமுக தலைவர் கருணாநிதி இறந்ததாக காவேரி மருத்துவமனை இன்று மாலை 6.10 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு முன் குவிந்திருந்த தொண்டர்கள்,பொதுமக்கள் கண்ணீர் விட்டு கதறியழுதனர்.

 

இந்த நிலையில் அவரது உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. கோபாலபுரத்தில்  பொதுமக்கள் அஞ்சலிக்காக நள்ளிரவு 1 மணிவரை வைக்கப்படும். அதன்பின்னர் சிஐடி இல்லத்தில் 3 மணி வரையிலும், அதன்பின்னர் ராஜாஜி ஹாலில்  பொதுமக்கள் அஞ்சலிக்காக  அதிகாலை 4 மணிக்கு வைக்கப்படவுள்ளது.

 

இந்தநிலையில் ஒருமுறை அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே? என திமுக செயல்தலைவரும், கருணாநிதியின் மகன்களில் ஒருவருமான ஸ்டாலின் தன் கைப்பட எழுதிய உருக்கமான கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.