'நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர்'.. கருணாநிதி மறைவுக்கு அஜீத்குமார் இரங்கல்!

Home > News Shots > தமிழ்

By |
Ajith Kumar statement on kalaignar Karunanidhi\'s Death

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு  இறந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. அதில் எவ்வளவு சிகிச்சை அளித்தும் கருணாநிதியை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளது.

 

மறைந்த கருணாநிதியின் உடல் தற்போது கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு கட்சித்தலைவர்கள்,நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

இந்தநிலையில் நடிகர் அஜீத்குமார் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,''சொல்வன்மை,மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்தவர் கருணாநிதி.கருணாநிதி பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும்  திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்,'' என தெரிவித்துள்ளார்.