மெரினாவில் என்ன சட்டசிக்கல்? நீதிபதிகள் கேள்வி.. 14 மணிநேரம் போராடி வென்ற கலைஞர்!

Home > News Shots > தமிழ்

By |
HC asks for legal clarification in allotting Marina for Kalaignar

கருணாநிதி மரணம்:

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு  இறந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. அதில் எவ்வளவு சிகிச்சை அளித்தும் கருணாநிதியை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்திருந்தது.


ஸ்டாலின் கோரிக்கை:

முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, ஸ்டாலின் நேரில் சந்தித்து மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் கலைஞருக்கு இடம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.பதிலுக்கு  சட்ட சிக்கல்கள் இருப்பதால் அண்ணா சமாதியில் இடம் ஒதுக்க முடியாது என்றும், அதற்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.

 

மனுதாக்கல்:

இதனைத்தொடர்ந்து திமுக தரப்பில்  உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) ஹூலுவாடி ரமேஷ்,நீதிபதி சுந்தர் ஆகிய இருவரும்இந்த மனுவை அவரச வழக்காக எடுத்து நேற்றிரவு 11.40 மணியளவில் தங்கள் விசாரணையைத் துவங்கினர்.

 

விசாரணை:

சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு பதிலளிக்க கால அவகாசம் அளித்து, காலை 8 மணிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.தொடர்ந்து இன்று காலை இந்த வழக்கின் மீதான விசாரணை தொடங்கியது.

 

வழக்குகள் வாபஸ்:

வழக்குகளைக் காரணம் காட்டி தமிழக அரசு கலைஞருக்கு இடம் ஒதுக்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் துரைசாமி, பாமக பாலு, டிராபிக் ராமசாமி ஆகியோர் தாங்கள் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

 

திமுக தரப்பு வாதம்:

காந்தி மண்டபம் அருகே திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதை மரியாதைக்குரியதாக கருத முடியாது சட்டத்திற்கு உட்படாத காரணங்களைக் கூறி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது.

 

எனது வாழ்வும், ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே  கூறியிருக்கிறார். மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காவிடில் மக்களின் மனம் புண்படும்.

 

எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா சமாதி அருகில் இடம் ஒதுக்கப்பட்டது, அதேபோல தான் ஜெயலலிதாவும் அடக்கம் செய்யப்பட்டார் .  13 முறை எம்எல்ஏவாக இருந்த கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் ஒதுக்காவிட்டால் தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்தும். காமராஜர், ராஜாஜி ஆகியோர் கொள்கைக்கும், திராவிட இயக்க தலைவர்கள் கொள்கைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. காமராஜரை காங்கிரஸ் அலுவலகத்தில் தான் அடக்கம் செய்ய முடிவெடுத்தார்கள்.  1988 அரசு உத்தரவுபடி ஏற்கனவே மெரினாவை மயானமாகவும், நினைவிடமாகவும் அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி. அந்த பகுதியில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய கோருகிறோம்.

 

ஜெயலலிதா உடலை அடக்கம் செய்யும்போது எந்த சட்ட சிக்கலும் இல்லை என அரசு கூறியது. தற்போது சட்ட சிக்கல் இருப்பதாக கூறும் அரசு, அவை என்ன என கூறவில்லை. அண்ணா சமாதி வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி கோருகிறோம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. கருணநிதி கருத்து எதிராக மனுதாக்கல் செய்வது  அவருக்கு அவமரியாதையாகும் என வாதாடினார்.

 

அரசுதரப்பு வாதம்:

ஜானகி இறந்தபோது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி எழுதிய உத்தரவு உள்ளது என நகலை அரசுதரப்பு வக்கீல் தாக்கல் செய்தார். "முந்தைய கால நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" திமுக தலைவர் கருணாநிதியை காந்திமண்டபம் பகுதியில் அடக்கம் செய்வது வேண்டாம் என்பதன் மூலம் காந்தி, காமராஜர், பக்தவசலம் போன்றோரை அவமதிப்பதற்கு சமம். கண்ணியமற்ற என்ற வார்த்தை தலைவர்களை  அவமதிப்பதாகும். திமுக தலைவர் கருணாநிதியின் உடலை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலத்தில் அடக்கம் செய்வது மரியாதைக்குரியது இல்லையா? அடக்கம் செய்ய நிலம் ஒதுக்க கோரும் உரிமை யாருக்கும் இல்லை. 

 

அரசு பாகுபாடு காட்டுகிறது என்ற புகாருக்கு முகாந்திரமில்லை. மெரினாவில் இடமளிக்க மறுப்பது சட்டப்பிரிவு 14-ஐ எப்படி மீறுவதாகும்அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோருவதற்கு யாருக்கும் உரிமையில்லை.

 

சட்ட சிக்கல்:

"மெரினாவில் நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் வாபஸ் பெற்ற பின் சட்ட சிக்கல் என்ன உள்ளது?" உங்கள் பதிலில் சட்டசிக்கல், வழக்கு நிலுவையில் உள்ளது என்றீர்கள். ஆனால் இப்போது வழக்கு நிலுவையில் இல்லையே சட்ட சிக்கல் இருப்பதாக சொல்லிவிட்டு அதற்கு முரணாக வாதிடுகிறீர்களே?முதல்வர்களை மெரினாவில் புதைக்கலாம் என புரோட்டோகால் சொல்லவில்லையே.

 

நினைவிடம் கட்ட சொல்வார்கள்:

"முதல்வர்களை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என மத்திய அரசின் நெறிமுறைகளில் கூறப்படவில்லை". மெரினாவில் திமுக தலைவர்  கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரும் மனு மீது உடனடியாக  தீர்ப்பளிக்க கூடாது. செய்திக்குறிப்பு என்பது அரசாணை கிடையாது, அதை எதிர்த்து முறையீடு செய்ய முடியாது.திமுக தலைவர்  கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்துவிட்டால் பிறகு நினைவிடம் கட்ட வேண்டுமென சொல்வார்கள்  என திமுக வழக்கறிஞர் வாதிட்டார்.

 

"சட்ட சிக்கல் உள்ளதால் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என அரசு கூறிவிட்டு, அதற்கு முரண்பாடான வாதத்தை அரசு முன்வைக்கிறது" என நீதிபதிகள்  கருத்து தெரிவித்தனர்.

 

தீர்ப்பு:

இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின்னர் கலைஞர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.