மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை !

Home > News Shots > தமிழ்

By |
Puducherry government is going to keep bronze statue

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை வைக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.


திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,அரசு பொது விடுமுறை அறிவித்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு செவ்வாய்கிழமை அறிவித்திருந்தது.

 

மேலும் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத அந்த முதுபெரும் தலைவருக்கு  வெண்கலச் சிலை வைக்கப்பட உள்ளதாகவும் புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளது.

 

மேலும், காரைக்காலில் அமையவுள்ள புதிய மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதியின் பெயரை சூட்டப்படுவதாகவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.