கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி!

Home > News Shots > தமிழ்

By |
Narendra Modi Pays homage to Karunanithi

சென்னை, ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த மறைந்த மு.கருணாநிதியின் பூத உடலுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

 

’இந்திராகாந்தியின் எமர்ஜென்சி காலக்கட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி அப்போதைய முதல்வராக எடுத்த முடிவு என்னை ஆச்சரியப்பட வைத்தது. கருணாநிதியின் மறைவு இந்தியாவிற்கு பேரிழப்பு.. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’ என்று நேற்றைய தினம் இரங்கல் செய்தியை தெரிவித்திருந்தார்.

 

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிரதமருடன், பாஜகவின் மாநில செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : #KARUNANIDHIDEATH #MKSTALIN #DMK #NARENDRAMODI #KARUNANITHIFUNERAL