மரணத்துக்கு பிறகும் கலைஞரின் வெற்றி.. துரைமுருகன்!

Home > News Shots > தமிழ்

By |
Karunanidhi\'s big win after death, gets Memorial in Marina

மறைந்த பிறகும் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றிருக்கிறார் கருணாநிதி என்று திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். முன்னதாக மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது குறித்து நீடித்து வந்த தடங்கலை நீக்கி, அவருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்குமாறு கோரி, மு.க.ஸ்டாலின் மனு அளித்திருந்தார்.

 

குறுகிய நேர காலத்துக்குள் நீண்ட நெடும் போராட்டத்துக்குப் பிறகு, மு.கருணாநிதியின் உடலை மெரினாவில் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வந்த நீதிமன்ற உத்தரவு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

இந்த நீதிமன்ற உத்தரவைக் கேட்ட ஸ்டாலின், உணர்ச்சிப் பெருக்கில் தழுதழுத்தபடி கதறி அழுத காட்சி அனைவரையும் உருக்கியது. இந்த நிலையில், துரைமுருகன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.