’இது முற்றுப்புள்ளி அல்ல..கமா’.. கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய கமல்! வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
KamalHaasan pays tribute to Karunanidhi

கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, ராஜாஜி அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மறைந்த கருணாநிதி குறித்த தன் இரங்கலை பதிவு செய்திருந்தார்.

 

அப்போது பேசிய அவர், ‘இது முற்றுப்புள்ளி அல்ல. கமா (காற்புள்ளி), கலைத்துறையில் நான் கடைக்குட்டி என்றால் அவர் மூத்தவர். அவர் நாட்டுக்கு ஒரு தலைவராக அவரை இழந்ததுபோக, தனிப்பட்ட முறையில் குடும்பத்தில் உள்ள ஒரு பெரியவரை இழந்திருக்கிறேன்’ என்று கூறினார்.

 

மேலும் , ‘அவரின் இறுதிக் காலங்களில் கலைத்துறையில் அவர் தன் பங்கினை குறைத்துக் கொண்டாலும், அவரது கலையின் ரீங்காரம் எங்கள் செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்த தமிழைப் பார்த்து ஆயிரமாயிரம் நடிகர்களாகிய நாங்கள் வணங்குகிறோம். என்றும் எங்களின் இந்த மரியாதை தொடரும்’ என்றும் கூறினார்.

Tags : #MKSTALIN #KAMALHAASAN #KARUNANIDHIDEATH #KARUNANITHIFUNERAL