'ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்'.. போட்டியாளர்கள் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss2 Tamil August 8th Promo Video

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு  இறந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் தற்போது ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும் என திமுக கழகம் அறிவித்துள்ளது.

 

இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இந்த செய்தி அறிவிக்கப்படுவது போல ப்ரோமோ வீடியோ வெளியானது. தொடர்ந்து அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் என அவர்கள் தெரிவிப்பது போல காட்சிகள் வெளியாகியுள்ளன.