ராஜாஜி அரங்கில் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால்,மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் !

Home > News Shots > தமிழ்

By |
Rahul gandhi delhi cm and telangana cm paid their last tribute l

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

 

இந்நிலையில் அவரின் மரண செய்தியை அறிந்து ட்விட்டரில் அவரது இரங்கலை தெரிவித்து இருந்தார்.இதனைதொடர்ந்து இன்று மதியம் ராஜாஜி அரங்கிற்கு நேரில் வந்து தனது இறுதி மரியாதையை செலுத்தினர்.

 

மேலும் திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் தங்களது இறுதி  அஞ்சலியை செலுத்தினார்கள்.