கருணாநிதியின் இறப்பு சான்று விபரங்கள்!

Home > News Shots > தமிழ்

By |
Kalaignar Karunanidhi death certificate published

5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவரான  கலைஞர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடல் அண்ணா நினைவிடத்திற்கு வலதுபுறம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

அவருடைய இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்களும் திமுக தொண்டர்களும் கலந்து கொண்டார்கள் . அதன் பிறகும் ஏராளமான தொண்டர்கள் அவர்  அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

 

இந்நிலையில் அவரது இறப்பு , சென்னை பெருநகர மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டது..அந்த சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி 94 வயதான மு.கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 7ம் தேதி மரணமடைந்தார் என்பது சென்னை  பெருநகர மாநகராட்சியின் மண்டல சுகாதார ஆய்வாளரால்  உறுதி செய்யப்பட்டு அவரது மனைவி தயாளு கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.