'கண்ணீர் விட்டு கதறியழுத ஸ்டாலின்'..கிழக்கில் மறைந்தது திராவிட சூரியன்!

Home > News Shots > தமிழ்

By |
Stalin breaksdown during Karunanidhi\'s funeral


திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் உடல் சந்தனப்பேழையில் வைத்து, முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அண்ணா சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

முன்னதாக கருணாநிதியின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கருணாநிதி குடும்பத்தினர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது துக்கம் தாளாமல் ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறியழுதார்.

 

அங்கு திரளாகக் கூடியிருந்த தொண்டர்களும் 'கலைஞர் வாழ்க வாழ்க வாழ்கவே' என உணர்ச்சிகரமாக கோஷமிட்டனர். இதனால் அந்த இடமே கண்ணீர் மயமாகக் காட்சியளித்தது.