ஜெயலலிதா-கருணாநிதியோடு 'முடிவுக்கு வந்தது' இசட் பிளஸ் பாதுகாப்பு!

Home > News Shots > தமிழ்

By |
Z Plus security ended in Tamil Nadu

மத்திய உளவுத்துறை தாக்கல் செய்யும் அறிக்கையின்படி, ஆண்டுதோறும் இந்தியாவில் 24 பேருக்கு வி.வி.ஐ.பி என்ற அடிப்படையில் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

 

அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கருணாநிதி,ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் தமிழ்நாட்டில் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதில் ஜெயலலிதாவுக்கு 1991-ம் ஆண்டு முதலும்,கருணாநிதிக்கு 1997-ம் ஆண்டு முதலும் இசட் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வந்தது.

 

கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா இறந்தார்.இதைத்தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.

 

இதைத்தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பும் தற்போது வாபஸ் பெறப்பட்டு உள்ளது.இதனால் தமிழ்நாட்டில் தற்போது இசட் பிளஸ் என்ற பாதுகாப்பு அம்சத்துக்கே வேலை இல்லாமல் போய்விட்டது.