'கலைஞர் தாத்தாவுக்கு'...மரியாதை செலுத்திய பிரபல நடிகரின் மகன்கள்!

Home > News Shots > தமிழ்

By |
Jayam Ravi sons paying their last respect to Kalaignar Karunanidhi

திமுக தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில், நேற்று முன்தினம் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.அவரது நினைவிடத்தில் திமுக தொண்டர்கள்,அரசியல்வாதிகள்,திரைபிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

முத்தமிழ் கலைஞரின் மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் வடித்தது. இந்தநிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது மகன்கள் ஆரவ்-அயான் இருவரும் கருணாநிதியின் இறுதிச்சடங்கினை தொலைக்காட்சியில் பார்த்து, சல்யூட் அடித்த புகைப்படத்தினை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து, அந்த குட்டீஸ்களின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.