விஜய்-அட்லீ படத்தில் 'தளபதியுடன்' டூயட் பாடப்போவது இவரா?

Home > News Shots > தமிழ்

By |
Kiara Advani likely to act in Thalapathy 63

தெறி,மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் 63 படத்துக்காக அட்லீயுடன்-விஜய் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகின. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கப் போவதாகவும், 2019-ம் ஆண்டு ஜனவரியில் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் 'தளபதி 63' படத்தில் விஜய்க்கு ஜோடியாக எம்எஸ் தோனி, பரத் என்னும் நான் படங்களில் நடித்த கியாரா அத்வானியை  நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

இதேபோல மெர்சல்,சர்கார் படங்களைத் தொடர்ந்து தளபதி 63 படத்திற்கும் இசைப்புயல்  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கக் கூடும் என, கடந்த வாரம் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். 

 

எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.