சர்கார் படத்தில் மீண்டும் 'இணைந்த' மெர்சல் கூட்டணி!

Home > News Shots > தமிழ்

By |
Lyrics Writer Vivek updates about Sarkar songs

விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான மெர்சல் படத்தின் பாடல்கள் அனைத்தும், இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் பாடல்களாகத் திகழ்ந்து வருகின்றன.

 

இந்தநிலையில் மெர்சல் போல சர்கார் படத்திலும் அனைத்து பாடல்களையும் தான் எழுதியுள்ளதாக, பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' சர்கார் படத்தில் அனைத்து பாடல்களையும் நான் தான் எழுதுகிறேன். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு பாடல்கள் எழுதுவதும், அவரிடம் இருந்து கற்றுக்கொள்வதும் எனக்கு கிடைத்த வரம். உறுதுணையாக இருக்கும் விஜய் சாருக்கு நன்றி.முருகதாஸ் சாரின் அழுத்தமான கதைக்கு பாடல் எழுதுவது சிறப்பு,'' இவ்வாறு விவேக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

 

மெர்சல் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே சர்கார் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இதன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான்-விவேக் கூட்டணி மெர்சலைத் தொடர்ந்து, மீண்டும் சர்கார் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.