'தீபாவளிக்கு பட்டாச ரெடி பண்ணுங்க'.. சர்கார் ஷூட்டிங் ஓவர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 02, 2018 05:35 PM
Varalakshmi Sarathkumar wraps up Sarkar Shooting

விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை, மிகப்பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

இந்தநிலையில் சர்கார் படத்தில் தனது போர்ஷன் முடிந்து விட்டதாக, நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சர்கார் படத்தில் எனது ஷெட்யூல் முடிந்து விட்டது.இதுபோன்ற அற்புத வாய்ப்பை எனக்கு அளித்த ஏஆர் முருகதாஸ் சார், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி. தளபதி விஜய்யுடன் இணைந்து வேலை செய்வது எனது கனவாக இருந்தது. தீபாவளி வரை காத்திருக்க முடியவில்லை. பட்டாச ரெடி பண்ணுங்க,'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

மேலும், சர்கார் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.