சர்கார் படத்தின் முதல் 'சிங்கிள் டிராக்' வெளியீட்டுத் தேதி உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 26, 2018 01:00 PM
Vijay\'s Sarkar 1st single release date is here!

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க முக்கிய வேடங்களில் ராதாரவி, பழ.கருப்பையா,வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தது. தொடர்ந்து சர்கார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை படக்குழு தற்போது வெளியிட்டு வருகிறது.

 

இந்தநிலையில் இப்படத்தின் 'முதல் சிங்கிள்' டிராக் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்களில் இருந்து, நமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

மெர்சல் படத்தின் முதல் சிங்கிள் டிராக்காக விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் 'ஆளப்போறான் தமிழன்' பாடல் வெளியாகி பல்வேறு சாதனைகளைப் படைத்தது. அதேபோல ஒரு மேஜிக் மீண்டும் சர்கார் படத்தில் நிகழுமா? என அறிந்துகொள்ள, செப்டம்பர் 19-ம் தேதி வரை நாம் காத்திருக்கலாம்.