ஆசியக்கோப்பை போட்டிகளில் இருந்து...ஹர்திக், அக்ஷர், ஷர்துல் 'அவுட்'

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 20, 2018 03:59 PM
Hardik, Axar, Shardul ruled out of Asia Cup 2018

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல் மற்றும் ஷர்துல் தாகூர் மூவரும் வெளியேறியதாக, இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ஹர்திக் பாண்டியா முதுகுவலி காரணமாக சுருண்டு விழுந்தார். உடனடியாக ஸ்ட்ரெச்சரில் வைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.தற்போது அவர் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்தநிலையில் ஆசியக்கோப்பை போட்டிகளில் இருந்து ஹர்திக், அக்ஷர், ஷர்துல் மூவரும் வெளியேறியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அவர்களுக்குப் பதிலாக ஜடேஜா, தீபக் சாகர், சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags : #HARDIKPANDYA #CRICKET #ASIACUP2018