'எல்லாம் தல தோனியோட கை ராசிதான்'.. கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 21, 2018 10:44 AM
My life changed Dhoni asked me to bowl said Kedar Jadhav

தோனி என்னை பந்து வீச்சாளராக அறிமுகப்படுத்திய பின்னர் தான் என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறி இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறிஇருக்கிறார் இந்திய அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்து கொண்டிருக்கும் கேதர் ஜாதவ்.

 

இந்திய அணியில் பல திறமையானவர்களை அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இருக்கிறது. பின் வரிசையில் விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மாவை அவரின் திறமையை வெளிக்கொணர தோனிதான் தொடக்க வீரராக களமிறக்கினார். அந்த வாய்ப்பை ரோகித் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதேபோல், கே.எல்.ராகுல், பும்ரா உள்ளிட்ட பல வீரர்களின் நிலை மாறுவதற்கு தோனி முக்கிய பங்களிப்பை செலுத்தியுள்ளார்.

 

அந்த வரிசையில் தற்போது  இந்திய அணியின் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவும் இணைந்துள்ளார்.2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோனிதான் அவரை பந்துவீச்சாளராக அறிமுகம் செய்தார்.அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட கேதர் நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தி தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.

 

போட்டிக்கு பிறகு பேட்டியளித்த கேதர் "தோனி  என்னை பந்து வீச்சாளராக அறிமுகப்படுத்திய பின்னர் தான் என்னுடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறியுள்ளது.பயிற்சிக்கு முன்பு நான் அதிகமாக பந்துவீச மாட்டேன்.உண்மையை சொல்லவேண்டும் என்றால் சில ஓவர்கள் மட்டுமே நான் பந்து வீசி பயிற்சி மேற்க்கொள்வேன்.மேலும் சரியான இடத்தில் பந்துவீசுவது தான் விக்கெட் வீழ்வதற்கு காரணம்.

 

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. இதுகுறித்த பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ், "நாங்கள் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள் என தயாராக இருந்தோம். ஆனால், மூன்றாவதாக ஒரு சுழல் பந்துவீச்சாளர் வந்து விக்கெட்களை எடுத்து விட்டார்" என ஜாதவ் பற்றி குறிப்பிட்டார்.

 

ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக உருவெடுத்து வரும் கேதர் பீல்டிங்கிலும் கில்லியாக இருக்கிறார்.இவ்வாறு பீல்டிங்கில் ஈடுபடுவதால் பல நேரங்களில் காயம் அடைந்துவிடுகிறார். சமீபத்தில் கூட கேதர் அறுவை சிகிச்சை ஒன்றினை செய்து கொண்டார். காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய அவர் ஆசியக் கோப்பை மூலம் தனது அடுத்த இன்னிங்சை தொடங்கியிருக்கிறார்.

Tags : #MSDHONI #CRICKET #PAKISTAN #KEDAR JADHAV