EXCLUSIVE: என்னுடைய 'முழுக்கதையை' பாக்யராஜ் படித்தாரா? இல்லையா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 27, 2018 08:07 PM
Director A.R.Murugadoss opens up about Sarkar story controversy

விஜய்,கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி,யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சர்கார். தீபாவளி பண்டிகையையொட்டி வருகின்ற நவம்பர் 6-ம் தேதி சர்கார் திரைப்படம் வெளியாகவுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

 

இந்தநிலையில் சர்கார் படத்தின் கதையும், தன்னுடைய செங்கோல் படத்தின் கதையும் ஒன்றுதான் என வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். மேலும்,செங்கோல்’ கதையையும், ‘சர்கார்’ கதையையும் ஒப்பிட் டுப் பார்த்தோம். இரண்டிலுமே கதையின் மையக்கரு என்பது ஒன்றுதான்,'' என திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

 

சர்கார் தொடர்பான சர்ச்சைகளுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து நமது தளத்திற்கு அவர் அளித்த Exclusive பேட்டியில்,'' இந்த விஷயம் ரொம்ப ஒருதலைப்பட்சமாக உள்ளது போல எனக்குத் தெரிகிறது. முதலில் என்னுடைய கதையைப் படித்தார்களா? என்னுடைய கதை என்பது ஒரு பவுண்டட் ஸ்கிரிப்ட். என்னுடைய பவுண்டட் ஸ்கிரிப்ட்டில் இருந்து கட் செய்து வெளியில் எடுத்ததுதான் சினாப்சிஸ். ஒரு சினாப்ஸிஸ் என்பது வேறு பவுண்டட் என்பது வேறு. வெளியில் சொல்லும்போது நாங்கள் பவுண்டட் ஸ்கிரிப்ட்டைப் படித்தோம் என திரு.பாக்யராஜ் அவர்களும் மற்றவர்களும் சொல்லுகின்றனர்.

 

என்னுடைய கேள்வி என்னவென்றால் என்னுடைய முழுக்கதையை பவுண்டட் ஸ்கிரிப்ட்டை திரு.பாக்யராஜ் அவர்கள் பிடித்தாரா? இல்லையா?என்பதுதான். ஏனென்றால் நான் என்னுடைய பவுண்டட் ஸ்கிரிப்ட்டை இனிமேல் தான் கோர்ட்டில் சப்மிட் செய்யப்போகிறேன்.என்னுடைய படத்தையும் அவர்கள் பார்க்கவில்லை. என்னுடைய பவுண்டட் ஸ்கிரிப்ட்டையும் அவர்கள் படிக்கவில்லை. நீங்கள் அந்த தரப்பில் முழுக்கதையையும் படித்து இருக்கிறீர்கள். ஆனால் என்னுடைய முழுக்கதையையும் படிக்கவில்லை.

 

அப்படி இருக்கும்போது இரண்டு கதையும் ஒன்றுதான் என அறிக்கை விடுவது எவ்வளவு பெரிய தவறு. அவ்வளவு பெரிய தண்டனை ஏன் எனக்குத் கொடுத்தீர்கள்? இரண்டு கதையிலும் ஹீரோவின் கள்ள ஓட்டைப் போடுவது எப்படி கதையாகும்? பெரும்பான்மையான உறுப்பினர்கள் இரண்டும் ஒரே கதையென ஒப்புக் கொண்டதாக கடிதம் கொடுத்திருக்கிறார். ஆனால் அங்குள்ள உறுப்பினர்கள் யாரிடமும் அவர் அந்த கடிதத்தைப் படித்துக் காட்டாமல் தனிப்பட்ட முறையில் அந்த கடிதத்தை திரு.பாக்யராஜ் அளித்திருக்கிறார்.இரண்டு கதைகளின் திரைக்கதை வேறு என பாக்யராஜ் சார் தெரிவித்திருக்கிறார்,''என்றார்.

 

சர்கார் கதை விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸின் முழு பேட்டியையும் காண கீழே உள்ள லிங்கைக் கிளிக் செய்யவும்.

 

Tags : #VIJAY #KEERTHISURESH #ARMURUGADOSS