'தளபதி விஜய்' அருகில் நிற்கும் இவர் யாரென்று தெரிகிறதா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 20, 2018 07:03 PM
Actor Ramesh Khanna\'s son acting in Vijay\'s Sarkar

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான நடிகர் விஜயயின் சர்கார் டீசர் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இதில் காட்சியின் பிரமாண்டம் கருதி,பல்வேறு நடிக,நடிகையர் மற்றும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் என ஏராளமானோர் நடித்துள்ளனர். அதில் ஒரு நடிகர் தற்போது கவனம் பெற்றுள்ளார்.

 

நடிகர்-இயக்குநர் ரமேஷ் கண்ணாவின் மகன் தான் அந்த நடிகர். அவரின் பெயர் ஜஸ்வந்த் கண்ணன். ஏ.ஆர்.முருகதாஸின் அசிஸ்டண்ட் இயக்குநராக இருக்கிறார். தனது படத்தில் உதவி இயக்குநர்களை நடிக்க வைக்கும் வழக்கம் கொண்ட முருகதாஸ் அதேபோல இப்படத்திலும் ஜஷ்வந்தை நடிக்க வைத்திருக்கிறார்.

 

17 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி, விஜய்க்கு மாபெரும் ஹிட்டாக அமைந்த 'பிரண்ட்ஸ்' படத்தில் ரமேஷ் கண்ணா விஜய்யின் நண்பராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #THALAPATHY62 #VIJAY #SARKAR