'எங்கள் அனுமதியின்றி இப்படி செய்தால் '.. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடும் எச்சரிக்கை!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 05, 2018 12:26 PM
Director A.R.Murugadoss warns Sarkar actors and Technicians

விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சர்கார். மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

 

இந்தநிலையில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார். அதில், ''ஏராளமானவர்களின் கடும் உழைப்பில் சர்கார் திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனால் சிறிதும் நேர்மையின்றி ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் ஏராளமான நேர்காணல்களை அளித்திருக்கிறீர்கள். வரும் காலத்தில் எங்களது அனுமதியின்றி இதுபோல நேர்காணல்களை அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும்,'' என தெரிவித்துள்ளார்.

 

ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.