'தளபதியின்' சிங்கிள் படத்தைக்கூட இதுவரை பார்த்ததில்லை: பிரபல நடிகர்

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 28, 2018 11:40 AM
Telugu Actor Vijay Devarakonda talks about Vijay

'பெல்லி சூப்புலு' படத்தின் மூலம் அறிமுகமாகி 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் இளைஞர்களின் பேவரைட் நாயகனாக உருவெடுத்திருப்பவர் விஜய் தேவரகொண்டா. 

 

அர்ஜுன் ரெட்டி,கீதா கோவிந்தம் படங்களின் வழியாக தமிழ்நாட்டிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தினை இவர் பெற்றிருக்கிறார். தொடர்ந்து நோட்டா படத்தின் வாயிலாக தமிழிலும் நேரடி ஹீரோவாக இவர் அறிமுகமாகவுள்ளார்.

 

இந்தநிலையில் நமது தளத்திற்கு அவர் அளித்த சமீபத்திய பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நடிகர் விஜய் குறித்து பேசும்போது,'' நான் விஜய் சார் படங்களின் காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் நடிப்பில் வெளியான எந்தவொரு படத்தையும் இதுவரை பார்த்ததில்லை. எனினும் அவர் படங்களின் ட்ரெய்லர்களை பார்த்து விடுவேன். அவரது ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்,'' என தெரிவித்துள்ளார்.  

Tags : #VIJAY #VIJAYDEVARAKONDA