இதனால் தான் 'சர்கார் இசை' வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கவில்லை

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 03, 2018 05:59 PM
VJ Anjana talks about Sarkar audio Launch function

சர்கார் இசை வெளியீட்டு விழாவை தான் தொகுத்து வழங்காததன் காரணத்தை பிரபல தொகுப்பாளினி விஜே அஞ்சனா தெரிவித்துள்ளார்.

 

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் விஜய், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், நடிகர் யோகிபாபு,இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

 

ஏராளமான பிரபலங்களும்,ரசிகர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னாவும், தொகுப்பாளினி தியாவும் தொகுத்து வழங்கினர்.

 

இந்தநிலையில் விஜய் ரசிகையான தான் ஏன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை? என்ற காரணத்தை விஜே அஞ்சனா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில்,''நானும் இசை வெளியீட்டு விழாவை மிஸ் செய்தேன். உங்களின் அன்பும், ஆதரவும் தொடர்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.குழந்தை இருப்பதால் வேலை செய்ய போதிய நேரம் இல்லை. ஆனால் எனது தோழிக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.அவ்வளவு பெரிய நிகழ்ச்சியில் பங்கு பெறுவது கண்டிப்பாக கவுரவம் தான்.நீ கலக்கு மா தியா,'' என விளக்கமளித்துள்ளார்.