சர்கார் டீசரில் 'இந்த காட்சியை' கவனித்தீர்களா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 19, 2018 07:22 PM
Sarkar movie speaks about Nellai ablaze incident

இன்று ரிலீஸ் ஆன சர்கார் டீசரில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல பல அரசியல் சார்ந்த காட்சிகள் இடம்பெற்று இருப்பதைப் பார்க்கும்போது, படத்தின் ரிலீஸ் பெரியளவில் இருக்கும் என நம்பலாம்.சர்கார் படத்தில் உண்மை சம்பவங்களை வைத்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சில காட்சிகளை அமைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த 201ம் ஆண்டு அக்டோபர்  22-ம் தேதி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து-சுப்புலட்சுமி தம்பதியர் தங்கள் 2 குழந்தைகளுடன் தீக்குளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நால்வருமே குடும்பத்துடன் மரணமடைந்தனர்.

 

தமிழ்நாட்டைப் பெரிதும் உலுக்கிய இந்த துயர சம்பவம் போலவே சர்கார் டீசரில் ஒரு  தீக்குளிப்பு சம்பவமும், அதனைப்பார்த்து விஜய் கண் கலங்குவது போன்றும் காட்சிகள் உள்ளன.

 

இதனால் நெல்லை தீக்குளிப்பு போல ஒரு உண்மை சம்பவம் 'சர்கார்' படத்தில் காட்சியாக இடம்பெற்று இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.