ஏன் இன்னும் மும்பைல இருக்கீங்க?.. 'இமைக்கா நொடிகள்' வில்லனைக் கேள்வி கேட்ட பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 02, 2018 01:11 PM
Why are you still in Mumbai? AR Murugadoss asked Anurag Kashyap

சமீபத்தில் திரைக்கு வந்த இமைக்கா நொடிகள் திரைப்படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள்,பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ், அனுராக் காஷ்யப்பை பாராட்டி இருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' அனுராக் காஷ்யப் சார் ஏன் இன்னும் மும்பையில் இருக்கிறீர்கள்? நீங்கள் சென்னைக்கு வருவதற்கு இதுதான் சரியான நேரம். தியேட்டர்களில் என்ன ஒரு கைதட்டல்,விசில்கள் தெரியுமா உங்களுக்கு? தமிழ் சினிமாவுக்கு உங்களைப்போல ஒரு வில்லன் தேவை,'' என தெரிவித்து இருக்கிறார்.

Tags : #NAYANTHARA #ARMURUGADOSS #ANURAGKASHYAP