Biggest Icon of Tamil Cinema All Banner

'கோலமாவு கோகிலா'வைப் புகழ்ந்து தள்ளிய சமந்தா.. காரணம் இதுதான்!

Home > News Shots > தமிழ்

By |
Samantha praises Nayanthara in Kolamavu Kokila and conveys her wishes

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை-லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகை நயன்தாராவை, மற்றொரு முன்னணி நடிகையான சமந்தா பாராட்டியிருக்கிறார்.

 

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் கோலமாவு கோகிலா படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை 5-ம் தேதி வெளியானது.நயன்தாரா-யோகிபாபு ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரெய்லருக்கு  யூடியூபில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

இந்தநிலையில் சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த நடிகை சமந்தா நயன்தாரா மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இது கொஞ்சம் தாமதம் தான் என எனக்குத் தெரியும். கோலமாவு கோகிலா படத்தின் டிரெய்லர் பார்த்தேன்.நன்றாக உள்ளது.படத்தைத் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.நயன்தாராவின் துணிச்சலைப் பாராட்டுகிறேன்,'' என வாழ்த்தியிருக்கிறார். 

Tags : #NAYANTHARA

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Samantha praises Nayanthara in Kolamavu Kokila and conveys her wishes | தமிழ் News.