தல அஜீத்தின் 'விஸ்வாசம்' பர்ஸ்ட் லுக் வெளியானது.. ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 23, 2018 03:39 AM
Thala Ajith\'s Viswasam first look Revealed

'தல' அஜீத் நடிப்பில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் முக்கிய வேடங்களில் விவேக்,தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு,கோவை சரளா  உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

 

அஜீத்-சிறுத்தை சிவா நான்காவது முறையாக இணைந்திருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை, படக்குழு எப்போது வெளியிடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

 

இந்த நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்றுகாலை 3.40 மணியளவில் வெளியிட்டுள்ளது. இதில் வயதான தோற்றம்,இளமையான தோற்றம் என மீசையை முறுக்கிக்கொண்டு இரண்டு அஜீத்துகள் இருப்பது போல பர்ஸ்ட் லுக்கை வடிவமைத்துள்ளனர்.

 

இதனால் அஜீத் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது  'தல'  ரசிகர்கள் இந்த  லுக்கினை சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து, தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.