தல59:அஜீத்தை 'இயக்கப்போவது' வினோத்தா?விஷ்ணுவர்த்தனா?.. விளக்கம் உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 15, 2018 01:20 AM
Thala59: Will be with Vinoth and not Vishnuvardhan

'தல59' படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கப்படவுள்ளது.மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார்.

 

இந்தநிலையில் 'தல59' படத்தை இயக்கபோவது அஜீத்தின் பேவரைட் இயக்குநர்களில் ஒருவரான, விஷ்ணுவர்த்தன் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.இது உண்மையா? என்பதை அறிந்து கொள்வதற்காக தயாரிப்பு தரப்பினை நாம் தொடர்பு கொண்டோம். இதனை தயாரிப்பு தரப்பினர் மறுத்து விட்டனர்,மேலும் தல59 படத்தை இயக்கப்போவது ஹெச்.வினோத் தான் என்பதையும் அவர்கள் உறுதி செய்தனர்.

 

எனவே விரைவில் இப்படம் குறித்த மேலதிக தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #AJITHKUMAR #VISWASAM #THALA59