8 வருடங்களுக்குப்பின் 'மீண்டும்' களத்தில் குதிக்கும் தல?..தெறிக்க விடும் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 23, 2018 04:25 AM
Thala Ajith\'s Dual role Movies list here

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை,படக்குழு இன்று காலை 3.40 மணியளவில் வெளியிட்டது.இதில் முறுக்கு மீசையுடன் 2 அஜீத்துகள் இருப்பது போன்ற தோற்றம், ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

முதன்முறையாக 1999-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான 'வாலி' படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.கடைசியாக 2010-ம் ஆண்டு வெளியான 'அசல்' படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதுவரையில் இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வேடங்களில்(வரலாறு) அஜீத் நடித்து 7 படங்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் இரண்டு அஜீத்துகள்  இருப்பதால், இரட்டை வேடங்களில் அவர் நடிக்கும் 8-வது படமாக 'விஸ்வாசம்' அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இரட்டை வேடங்களில் அஜீத் நடித்த படங்கள்:

 

வாலி - தேவா,சிவா

சிட்டிசன் - சிட்டிசன்,சுப்பிரமணி

வில்லன் - சிவா,விஷ்ணு

அட்டகாசம் - குரு,ஜீவா

வரலாறு  - ஜீவா,சிவசங்கர்,விஷ்ணு

பில்லா - டேவிட் பில்லா,சரவண வேலு

அசல்- ஜீவானந்தம்,சிவா