'உங்களுக்கு மாற்று எவருமில்லை'.. கமலைப் பாராட்டிய பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 01, 2018 02:58 AM
BiggBoss Tamil: No one can Replace You as Makkalin Pradhinidhi

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் ரித்விகா டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து 2-வது முறையாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். 

 

3-வது சீசனை தொகுத்து வழங்குவீர்களா? என்ற மக்களின் கேள்விக்கு அதற்கென்ன தொகுத்து வழங்கிட்டா போச்சு என கமல் பதிலளித்திருந்தார்.

 

இந்தநிலையில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கியது நன்றாக இருந்தது என பாராட்டியுள்ளார். 

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' அற்புதமான பினாலே நிகழ்ச்சி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மக்கள் பிரதிநிதியான உங்களுக்கு மாற்று எவருமில்லை. விஜய் தொலைக்காட்சியின் சிறந்த நிகழ்ச்சி,'' என தெரிவித்துள்ளார்.