'நட்பை' புதுப்பித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்.. 'சித்தப்பா' மட்டும் ஆப்செண்ட்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 29, 2018 06:21 PM
Biggboss Tamil Grand Finale celebration starts

பிக்பாஸ் பினாலே கொண்டாட்டம் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதால் டைட்டிலை வெல்லப்போகும் அந்த ஒரு நபர் யார்? என அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

 

இந்தநிலையில் பினாலே கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய மமதி சாரி, ஆனந்த் வைத்யநாதன்,ஷாரிக், மஹத், யாஷிகா, மும்தாஜ், பாலாஜி, நித்யா,டேனியல், வைஷ்ணவி, நித்யா மற்றும் சென்றாயன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

 

ஆனால் 'சித்தப்பா' என்று அழைக்கப்படும் பொன்னம்பலம் மட்டும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் சித்தப்பா ஆர்மியினர் கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது.