'பிக்பாஸ் டைட்டிலை' வெல்லப்போவது நேர்வழியா? குறுக்குவழியா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 29, 2018 04:29 PM
Biggboss Tamil: September 29th Promo Video 2

பிக்பாஸ் பினாலே கொண்டாட்டம் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதால் டைட்டிலை வெல்லப்போகும் அந்த ஒரு நபர் யார்? என அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

 

இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் மேடையில் நிற்பது போலவும், கமல் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்து பேசுவது போலவும் காட்சிகள் இருந்தன.

 

தொடர்ந்து சற்றுமுன் வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில்,''எதிர்பார்த்ததை விட அமோக வாக்குப்பதிவு அனைவருக்கும் நன்றி. நேர்வழியில் வெற்றியை அடைவது ஒருவகை.குறுக்குவழியில் அதே வெற்றியை கவர்வது இன்னொரு வகை. வெற்றி பெறப்போவது நேர்வழியா?குறுக்குவழியா?,'' என கமல் கேள்வி கேட்பது போல காட்சிகள் உள்ளன.