பிக்பாஸ் சீசன் 2-வின் 'அந்த' ஒரு வெற்றியாளர் யார்?

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 28, 2018 10:49 AM
Biggboss Tamil: Who is the Winner in season 2?

கடந்த வருடம் தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதில் முதல் சீஸனின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.

 

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசன் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரியவரும்.

 

இந்தநிலையில் பிக்பாஸ் பைனல் குறித்த புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வரும் ஞாற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போதைய வாக்கெடுப்பின்படி ரித்விகா 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கிறார். தொடர்ந்து 2,3 மற்றும் கடைசி இடங்களில் முறையே ஐஸ்,விஜி,ஜனனி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.