'எத்தி' சிம்புவுக்கு பிடித்த 'பிக்பாஸ்' போட்டியாளர் இவர் தானாம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 28, 2018 05:44 PM
Biggboss Tamil: Simbu\'s favorite contestant Aishwarya Dutta

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. இதனால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களும், வீட்டுக்குள் விருந்தினர்களாக வந்து செல்கின்றனர்.

 

மேலும் சீசன் 2-வின் அந்த ஒரு வெற்றியாளர் யார்? என்பதை அறிந்துகொள்ள, ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.

 

இந்தநிலையில் நடிகர் சிம்புவுக்கு பிடித்த போட்டியாளர் யார்? என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டுக்கு மீண்டும் வந்த சென்றாயன், ஐஸ்வர்யாவிடம் பேசும்போது,'' நான் சிம்பு வீட்டுக்கு போனேன். அவர் எனக்கு புக் கிஃப்டா கொடுத்தாரு. அவருக்குப் பிடித்த போட்டியாளர் நீதானாம்.அவரது அடுத்த படத்தில் உனக்கு ஹீரோயின் வாய்ப்பு தருவதாக தெரிவித்துள்ளார்,''என்றார்.

 

இதைக்கேட்ட ஐஸ்வர்யா மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து லவ் யூ ஸ்டார் என சிம்புவுக்கு  நன்றி தெரிவித்தார்.

 

சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்-நடிகைகளின் நடிப்பில் நேற்று வெளியான 'செக்க சிவந்த வானம்' படம், ரசிகர்கள்-விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.