'அப்படி பண்றவங்கள தப்பானவங்கனு சொல்லலாம்'.. மீண்டும் கூட்டணி அமைத்த ஐஸ்-யாஷிகா-மஹத்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 28, 2018 12:23 PM
Biggboss Tamil: September 28th Promo Video 2

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் பாலாஜி-மமதி சாரி, ஆனந்த் வைத்யநாதன் ஆகியோர் வீட்டுக்குள் வந்தது போல காட்சிகள் இருந்தன. தொடர்ந்து வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் யாஷிகா,மஹத்-டேனி வீட்டுக்குள் வந்திருப்பது போல காட்டப்படுகிறது.

 

அதில் ஐஸ்-யாஷிகா-மஹத் மூவரும் பெட்டில் அமர்ந்து டேனி வெளியேற்றத்தின் போது நடந்த நிகழ்வுகளை பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது ஐஸ் இன்னும் 2 நாள்தான் முடிஞ்சிடுச்சு விடுங்க என கூறுகிறார்.

 

நீண்ட நாட்களுக்குப்பின் ஐஸ்-யாஷிகா-மஹத் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்திருப்பதாலும், வெளியில் சென்று நிகழ்ச்சியைப் பார்த்து வீட்டுக்குள் வந்துள்ளதாலும் டேனியிடம் பேசாமல் அவரைப் புறக்கணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.