'இங்கேம் இங்கேம் காவாலே'.. பிக்பாஸ் வீட்டுக்குள் கெத்தாக 'எண்ட்ரி' கொடுத்த ஹீரோ!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 29, 2018 05:57 PM
Biggboss Tamil: September 29th Promo Video 3

பிக்பாஸ் பினாலே கொண்டாட்டம் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதால் டைட்டிலை வெல்லப்போகும் அந்த ஒரு நபர் யார்? என அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

 

இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் மேடையில் நிற்பது போலவும், கமல் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்து பேசுவது போலவும் காட்சிகள் இருந்தன.

 

தொடர்ந்து சற்றுமுன் வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில்,''எதிர்பார்த்ததை விட அமோக வாக்குப்பதிவு அனைவருக்கும் நன்றி. நேர்வழியில் வெற்றியை அடைவது ஒருவகை.குறுக்குவழியில் அதே வெற்றியை கவர்வது இன்னொரு வகை. வெற்றி பெறப்போவது நேர்வழியா?குறுக்குவழியா?,'' என கமல் கேள்வி கேட்பது போல காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான 3-வது ப்ரோமோ வீடியோவில் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் புகழ் ஹீரோ விஜய் தேவரகொண்டா பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுப்பது போல காட்சிகள் உள்ளன.

 

கமல் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களிடம் பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கான ஷீல்டைக் காட்டி, இதனை எடுத்துக்கொண்டு உங்கள் நண்பர் ஒருவர் வீட்டுக்குள் வருவார் என தெரிவிக்கிறார். தொடர்ந்து போட்டியாளர்கள் வீட்டுக்கு வெளியில்  வந்து பார்க்கும்போது, ஷீல்டை எடுத்துக்கொண்டு'இங்கேம் இங்கேம்' பாடல் பின்னணியில் ஒலிக்க  விஜய் தேவரகொண்டா வீட்டுக்குள் வருவது போல காட்டப்படுகிறது.

 

தொடர்ந்து வீட்டுக்குள் செல்லும் விஜய் அரங்கில் அமர்ந்திருக்கும் மக்களைப் பார்த்து நான் அங்க வரவா? என கேட்க, மக்கள் கைதட்டி ஆராவாரம் செய்கின்றனர். இவரது நடிப்பில் அடுத்ததாக 'நோட்டா' திரைப்படம் அக்டோபர் 5-ம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.