பிக்பாஸ் சீசன் 2 'டைட்டிலை' தட்டிச்சென்றது இவரா?.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 29, 2018 02:53 PM
Biggboss Tamil Season 2 Title winner now Revealed

பிக்பாஸ் 2 சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சியின் பினாலே நடைபெறவுள்ளது. இதில் வீட்டைவிட்டு வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கவுள்ளனர்.

 

இறுதிப்போட்டிக்கு ஐஸ்வர்யா தத்தா, ரித்விகா, விஜயலட்சுமி, ஜனனி ஐயர் என மொத்தம் நான்கு பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் ரித்விகா முதல் இடத்தையும், ஐஸ் 2-வது இடத்தையும், விஜி 3-வது இடத்தையும் பிடித்திருந்தனர். ஜனனி கடைசி இடத்தில் இருந்தார்.

 

இதனால் டைட்டிலை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வந்தது. மேலும் தமிழ்ப்பெண்களில் ஒருவர் தான் டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.

 

இந்தநிலையில் தமிழ்ப்பெண் ரித்விகா டைட்டிலை தட்டிச்சென்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.2-வது,3-வது மற்றும் 4-வது இடங்களை வென்றவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

 

எனினும் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் ரித்விகா முதல் இடத்தை பிடித்துள்ளதால் வாக்குகள் அடிப்படையில் ஐஸ் 2-வது இடத்தையும், விஜி 3-வது இடத்தையும் ஜனனி கடைசி இடத்தையும் பிடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.